கர்நாடகாவில் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதி 6 முறை பல்டி அடித்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு அருகேயுள்ள கத்திஹோசாஹள்ளி கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலை வழியாக வேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட கார் 6 முறை பல்டி அடித்து விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய கார் ஓட்டுநர் முகமது யூனிஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், காரில் பயணம் செய்த மேலும் 4 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து கர்நாடக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இச்சம்பவத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.