பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா நிறைவடைந்த நிலையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 45 நாட்கள் நடைபெற்ற மகா யாகம் நிறைவடைந்ததாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கை கும்பமேளாவின் மூலம் ஒரே இடத்தில் சங்கமித்ததாக தெரிவித்துள்ளார்.
கும்பமேளாவை மாபெரும் வெற்றியடைய செய்த நாட்டு மக்களின் கடின உழைப்புக்கும், முயற்சிக்கும் பாராட்டு தெரிவித்துள்ள மோடி, நாட்டு மக்கள் எப்போதும் இதுபோலவே ஒற்றுமையுடன் இருக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.
கும்பமேளாவில் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள், துறவிகள் என அனைவரும் பாராபட்சமின்றி பங்கேற்றதாக நெகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்த மாபெரும் நிகழ்வு நாட்டு மக்களின் விழிப்புக்கு மிகவும் உதவியதாக தெரிவித்துள்ளார்
திரிவேணி சங்கமத்தில் பல கோடி பேர் புனித நீராடியது தன் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.