தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கும், அரசு பள்ளிகளுக்கும் தனித்தனி விதிகள் ஏன்? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள அவர்,
தனியார் பள்ளிகள் என்றால் மூன்று மொழிகள்? அரசு பள்ளி என்றால் 2 மொழிகளா என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் இந்தி திணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது திமுகவினர் தான் என விமர்சித்துள்ள அண்ணாமலை, திமுக பொதுச்செயலாரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் பேச்சை முதலமைச்சர் ஸ்டாலின் இன்னும் கேட்கவில்லை போலும் என தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக்கொள்கை இந்திய மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியைத்தான் 3-வது பயிற்று மொழியாக பரிந்துரைப்பதாக அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.