கோவை மாவட்டம் ஓணாப்பாளையம் பகுதியில் ஆடுகளை கடித்துக் கொல்லும் சிறுத்தையின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
ஓணாப்பாளையம் பகுதியை சேர்ந்த வெண்ணிலா, தனது தோட்டத்தில் 8 ஆடுகளை வளர்த்துவந்தார். வழக்கம்போல ஆடுகளை பட்டியில் கட்டிவைத்துவிட்டு தூங்க சென்றார். அப்போது, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஆடுகளை ஒவ்வொன்றாக வேட்டையாடியது.
இதையடுத்து ஆடுகள் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்ட வெண்ணிலா வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது, சிறுத்தை ஒன்று ஆடுகளை வேட்டையாடியது தெரியவந்தது. சிறுத்தையை கூண்டமைத்து பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.