விஜய் ஒரு பாதரசம் என்றும், உலோகங்களுடன் பாதரசம் ஒட்டாதது போல், விஜய்யும் மக்களுடன் ஒட்ட மாட்டார் எனவும் நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் விமர்சித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட பின் கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நாடு இருக்கும் மோசமான சூழலில், புதிதாக கட்சி ஆரம்பித்த விஜய், பாசிசத்திற்கும், பாயசத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் செயல்படுகிறார் என விமர்சித்தார்.
நடிகர் விஜயின் வேஷம் தேர்தல் நேரத்தில் கலைந்துவிடும் என நடிகர் போஸ் வெங்கட் தெரிவித்தார்.
இதேபோல், முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர், புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, பேசிய அவர்கள் தொகுதி மறுவரையறை செய்வதால் தென் மாநிலங்களில் மட்டும் 20 தொகுதிகள் வரை குறைய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தனர்.