பாஜக ஒரு பொருட்டே இல்லை என்று கூறிய எம்.பி கனிமொழிக்கு அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பாஜகவை எதிரி லிஸ்ட்டில் வைக்கவே இல்லை என பேசியிருப்பது, பாஜக குறித்த ஆழ்மனதின் பெரும் பயத்தையே காட்டுவதாக கூறியுள்ளார்.
திமுக-வின் கருத்துக்களைப் பார்த்து பாஜக பதறுவதாக கூறியிருப்பது நகைச்சுவை ரகம் என விமர்சித்துள்ள வானதி சீனிவாசன், பொய்களை மட்டுமே அடுக்கி வெறுப்புணர்வைப் பரப்பும் உங்கள் அரசியல் மொழிகள், ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் பெரும் கோபத்தைத் தருவதாக தெரிவித்துள்ளார்.
திமுக அரசின் அவலத்தை வெளிக்கொணரும் தங்களைப் பார்த்துதான் அறிவாலய தலைவர்கள் நடுங்குகிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ள அவர், அச்சத்தில் பாஜக போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது போன்ற அராஜக அடக்குமுறைகளை ஏவி ஜனநாயக உரிமையைப் பறிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே நடைமுறையில் பதற்றப்படுவது நாங்களா அல்லது நீங்களா எனவும் கனிமொழிக்கு வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்…