ஈ.வெ.ரா. குறித்து சீமான் விமர்சித்ததால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவர் பழி வாங்கப்படுவதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.
திருவையாறு அக்கசாலை விநாயகர் ஆலய குமபாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிம் பேசினார்.
அப்போது, தமிழகத்தில் இல்லாத பிரச்சனையை கற்பனையாக மக்கள் மத்தியில் புகுத்தி விட்டு தமிழகத்தில் ஒரு கொந்தளிப்பை எப்போதும் வைத்து இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் நினைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.
தொகுதி மறுசீரமைப்பு குறித்து அரசாங்கம் ஏதும் சொல்லாத நிலையில், அது குறித்து திமுக அரசு சர்ச்சையை கிளப்புவது மோசடி என்றும் அவர் கூறினார்.
முதலமைச்சர் குடும்பத்தினரால் தான் தமிழ் மொழிக்கு ஆபத்து என்றும் அவர் சாடினார். சீமான் வீட்டு பாதுகாவலர் கைது செய்யப்பட்டதில் காவல் ஆய்வாளரின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், சம்மனை ஒட்டிய பின் வீட்டிற்குள் சென்றது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
ஈ.வே.ராமசாமியை சீமான் விமர்சித்து வந்ததால் ராமசாமி கைக்கூலிகள் இது போன்ற மோசமான செயலில் ஈடுபட்டு வருவது வன்மையாக கண்டிக்கதக்கது என்றும் தெரிவித்தார்.
ஈ.வே.ராமசாமியின் பொய் ரூபத்தை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து கொண்டு இருக்கிறார் சீமான். அதை தாங்கி கொள்ள முடியாமல் அனாவசியமாக அவரை கொடுமைப் படுத்துவதாகவும் ஹெச்.ராஜா தெரிவித்தார்.