உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் பேசிய அவர், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தொலைதூர மருத்துவ வசதி விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் மற்றும் திறன்களை வழங்குவதற்காக பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 66 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்த பிரதமர் மோடி, உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்த பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் உள்ளதாக தெரிவித்தார்.