இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வேலை வாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பான பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 2015 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில், இந்தியா 66 சதவீதம் வளர்ச்சியடைந்து 3 புள்ளி 8 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
இந்தியாவின் கல்விமுறை மாற்றத்துக்கு உள்ளாகி வருவதாக கூறிய பிரதமர் மோடி, இந்த ஆண்டு பட்ஜெட்டில் உட்கட்டமைப்பு, தொழில், பொருளாதாரம் உள்ளிட்டவற்றின் மீதான முதலீடுக்கு சம உரிமை அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.