திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே குழந்தைகளுடன் காவல்நிலையத்திற்கு வந்த பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
வெள்ளப்பொம்மன்பட்டியை சேர்ந்த வேலுமணி என்ற பெண்ணிடம் இளங்கோ என்பவர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஒரு லட்ச ரூபாய் பணத்தை பெற்றுள்ளார்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வேலுமணி வடமதுரை காவல்நிலையத்தில் புகாரளித்தார். ஆனால் இளங்கோ மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்த அப்பெண் தனது குழந்தைகளுடன் காவல்நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.