பயங்கரவாதத்தை வற்றாத சவால் என குறிப்பிட்ட மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அதனை கவனமாக கையாள வேண்டுமென தெரிவித்தார்.
அயர்லாந்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் “உலகத்தின் மீதான இந்தியாவின் பார்வை” என்ற தலைப்பில் ஜெய்சங்கர் சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், உலகில் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கும் மோதல்கள் நாட்டின் வளர்ச்சியை பாதிப்பதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவதாக தெரிவித்தார். போரை தவிர்த்து நாடுகள் சமாதான பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.