தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி போட்டியில், அரியானா, மகாராஷ்டிரா, மத்தியபிரதேச அணிகள் வெற்றி பெற்றன.
தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள அணிகள் A,B,C என்று மூன்று டிவிசனாக பிரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி நடந்த ஆட்டங்களில் பீகார் அணியை தோற்கடித்து தெலங்கானாவும், பெங்காலை வீழ்த்தி மத்திய பிரதேச அணியும், மணிப்பூரை வீழ்த்தி மகாராஷ்டிராவும், ஒடிசாவை தோற்கடித்து அரியானா அணியும் வெற்றியை பதிவு செய்துள்ளன.