பாஜக இல்லாமல் தமிழக அரசியல் இல்லை என்ற சூழலை உருவாக்கி இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர், பாஜக உடனான கூட்டணிக்காக பலரும் தவம் கிடப்பதாக தெரிவித்தார். தாங்கள் யாருக்கும் எதிரி அல்ல என்றும், எங்கள் நோக்கம் பாஜகவை தமிழகத்தில் நிலை நிறுத்துவது மட்டுமே என்றும் அவர் தெரிவித்தார்.
மும்மொழிக் கொள்கை பிரச்னையை திசை திருப்ப ED ரெய்டு என கூறுவது அபத்தமானது என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழகத்தின் உரிமைகளை அண்டை மாநிலங்களுக்கு திமுக அரசு விட்டுக் கொடுப்பதாக சாடிய அவர், எங்களுடன் பயணம் செய்யும் கூட்டணி கட்சித் தலைவர்கள் இறுதி வரை எங்களுடன் இருப்பதையே விரும்புவதாகவும் அவர் கூறினார். திமுக நடத்திய நீட் கையெழுத்து இயக்கம் என்ன ஆனது? எனறு அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.