மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரில் டெல்லியை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்றது.
லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்தது.
இதையடுத்து பேட்டிங் செய்த குஜராத் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. குஜராத் அணி சார்பில் அதிகபட்சமாக ஹர்லீன் தியோல் 70 ரன்கள் குவித்தார்.