சென்னை சைதாப்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விடிய விடிய மதுவிற்பனை நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மதுபானக் கடைகளில் நண்பகல் 12 மணிக்கு பிறகே, மது விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அதிகாலை 6 மணி முதலே கூட்டம் அலைமோதுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் மா.சுப்பிரமணியனின் தொகுதியில் நடைபெறும் இந்த விற்பனை குறித்து, அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.