பீகார் மாநிலம் ஆரா நகரில் உள்ள நகைக்கடையில் புகுந்த கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் 25 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகளை அள்ளிச் சென்றனர்.
நகைக்கடைக்குள் புகுந்த 6 கொள்ளையர்கள், ஊழியர்களையும் வாடிக்கையாளர்களையும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டினர். பின்னர், நகைகளை அள்ளிச் சென்றனர்.
அவர்களை போலீஸார் விரட்டிச் சென்று துப்பாக்கியால் சுட்டதில் இருவர் காயமடைந்த நிலையில் பிடிபட்டனர். தப்பியோடிய கொள்ளையர்களை தனிப்படை போலீஸார் தேடிவருகின்றனர்.