பிரதமர் பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் தவறாக பேசுவதை ஒட்டுமொத்த இந்தியர்களையும் அவமதிப்பதாக எடுத்துக் கொள்ளலாமா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக எம்.பி.க்கள் பற்றி பேசுவது எப்படி தமிழர்கள் பற்றி பேசுவதுபோல் ஆகும் என கேள்வி எழுப்பினார்.
தர்மேந்திர பிரதான் பற்றி தவறாக பேசுவதை திமுகவினர் வாடிக்கையாக வைத்துள்ளதாகவும், செங்கல்பட்டு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது ஏற்புடையதல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
ஒரே மேடையில் 10 பொய்களைப் பேசியதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் எனறும் தெரிவித்த அண்ணாமலை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் எனறும் கேள்வி எழுப்பினார்.