மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே நண்பர்களுக்குள் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
சிக்கந்தர் சாவடியை சேர்ந்த கமலேஷ் என்பவர், தனது நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்த போது மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட நிலையில் கமலேஷ்க்கு கத்தி குத்தி விழுந்ததால் அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.