திண்டுக்கல் மாவட்டம், வில்பட்டி பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
வில்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பெலாக்கவி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள கரடு முரடான சாலையில் மழை காலங்களில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதே போல குடிநீர், மற்றும் தெரு விளக்குகள், பேருந்து வசதிகள் என அடிப்படையாக எந்த ஒரு வசதிகளும் இல்லை எனவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். அடிப்படை வசதிகளை அமைத்து தரக்கோரி பலமுறை தெரிவித்தும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகிகள் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இரவு நேரங்களில் வெளியில் வருவதற்கு கூட அச்சம் உள்ளதாக தெரிவித்த மக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் தெரிவித்தனர்.