மக்கள் விரோத திமுகவுக்கு, வரும் 2026 ஆம் ஆண்டு தகுந்த பதிலை மக்கள் கொடுக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்,
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் பாஜக சாரிபில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர்,திமுக தென்காசி மாவட்டத்துக்குக் கொடுத்த ஒரு தேர்தல் வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை என்றும், செண்பகவல்லி அணையைச் சரி செய்வோம் என்று கூறிய முதலமைச்சர் டாஸ்மாக் தண்ணீரைத் தான் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.
தென்காசியில், கனிமவளங்களைக் கொள்ளையடிப்பதுதான் அவர்கள் முழு நேரத் தொழிலாக இருக்கிறது என்றும்,. இங்குள்ள மக்களுக்கு கனிமவளங்கள் கிடைப்பதில்லை என்றும் கூறினார்.
ஆனால், கனிம வளங்கள் தினமும் லாரிகள் மூலம் கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும், பதிலுக்கு, மருத்துவக் கழிவுகளைக் கொண்டு வந்து இங்கு கொட்டிக் கொண்டிருக்கிறது கேரளா என்றும் அவர் சாடினார். இதனை எதிர்த்து தமிழக பாஜக குரல் கொடுத்ததும்தான், மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவது குறைந்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார்.
மக்கள் விரோத திமுகவுக்கு, வரும் 2026 ஆம் ஆண்டு தகுந்த பதிலை மக்கள் கொடுக்க வேண்டும் என்றும். நமது குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலமாகத் தமிழகம் மாற வேண்டும் என்றும் அவர் கூறினார். அதற்கு தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும், அந்த அரசியல் மாற்றம், தென்காசியில் இருந்து தொடங்கும் என்பது உறுதி என்றும் அண்ணாமலை தெரிவத்தார்.