நீலகிரியில் இ-பாஸ் நடைமுறையால் பல்வேறு தரப்பினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது.
நீலகிரியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இ-பாஸ் நடைமுறை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தலைவர் பாரூக், இ-பாஸ் நடைமுறையால் நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
சுற்றுலா தொழிலை நம்பியே மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் எனக் கூறினார்.