சேலம் திமுக மேயரின் "வாஸ்து" : அறை மாறினால் அதிருப்தி விலகுமா?
Sep 5, 2026, 06:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சேலம் திமுக மேயரின் “வாஸ்து” : அறை மாறினால் அதிருப்தி விலகுமா?

Murugesan M by Murugesan M
Mar 20, 2025, 01:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சேலம் மாநகராட்சியில் பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றவில்லை என பொதுமக்கள் குமுறுகின்றனர்.  இந்த நிலையில் நாத்திகம் பேசும் திமுகவை சேர்ந்த மேயர் வாஸ்து முறையை கையில் எடுத்திருப்பது அக்கட்சியின் கவுன்சிலர்கள் மத்தியில்கூட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்னதான் நடக்கிறது சேலம் மாநகராட்சியில்… பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.

சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இவற்றில் கழிவு நீர் கால்வாய் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாகச் செய்து கொடுக்கப்படாத நிலையில் மக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.  இந்நிலையில்தான் சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் மற்றொரு களேபரம் அரங்கேறியுள்ளது.

கடந்த மாதம் நடந்த மாநகராட்சியின் இயல்பு கூட்டத்தில் திமுகவின் மூத்த உறுப்பினர்களும் கவுன்சிலர்களுமான குணசேகரன், ஜெயக்குமார் உட்படப் பலர் கடும் அதிருப்தியில் கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர்.

இந்த தகவல்  திமுகவின் தலைமைக்குச் சென்ற நிலையில் சேலம் வந்திருந்த முதல்வர் ஸ்டாலின் மேயர் ராமச்சந்திரன், அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோரை கடிந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.  இப்படியாகச் சேலம் மாநகராட்சி தொடர்ச்சியான சர்ச்சைகளில் சிக்கும் நிலையில்  வாஸ்து முறைப்படி மேயர் ராமச்சந்திரன் தனது அறையை மாற்றும் முயற்சியை அரங்கேற்றத் துவங்கியுள்ளார்.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சி மைய அலுவலகம் கட்டப்பட்டுக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திறப்பு விழா நடைபெற்றது. இந்த அலுவலகத்தின் கூட்ட அரங்கின் வலது பக்கத்தில் திமுகவைச் சேர்ந்த மேயர் ராமச்சந்திரனுக்கும்,  அதன் எதிரில் காங்கிரசைச் சேர்ந்த துணை மேயர் சாரதா தேவிக்கும் தனித்தனி அறைகள் உள்ளன.

தற்போது செயல்பட்டு வரும் அறையை காலி செய்துவிட்டு வாஸ்து முறைப்படி வேறு அறைக்கு மாற மேயர் ராமச்சந்திரன் முடிவு செய்துள்ளார். மாநகராட்சி கூட்ட அரங்கிற்கு இடது புறத்தில் உள்ள பொதுப்பிரிவு அலுவலகத்தை காலி செய்துவிட்டு அதில் மேயர் அறையை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இதற்காக பொது பிரிவின் இரண்டு சுவர்கள் கிரில் மெஷின் கொண்டு  உடைக்கப்பட்டு, அங்கிருந்த பீரோ,  சேர்கள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. மேலும்  மாநகராட்சி ஊழியர்களுக்குக் குறுகலான ஒரு அறை வழங்கப்பட அவர்களும் அதிருப்தியில் உள்ளனர்.

சேலம் மாநகராட்சி நிர்வாகம் நிதிப் பற்றாக்குறையின் காரணமாக மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் விழி  பிதுங்குவதோடு, ஊழியர்களுக்குச் சம்பளம்கூட கொடுக்க முடியாமல் திணறி வருகிறது.

இந்நிலையில், மேயர் அறையை மாற்றப் பல லட்ச ரூபாய் வீணடிக்கப்படுவதாக பல்வேறு அரசியல் கட்சியினர் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

நாத்திகம் பேசும் திமுக-வை சேர்ந்த மேயர் வாஸ்து முறையைக் கையில் எடுத்திருப்பது அக்கட்சியின் கவுன்சிலர்கள் மத்தியிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் அடிப்படை வசதிகளை மறந்துவிட்ட மேயர் மீது பொதுமக்களும்  கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

Tags: சேலம் மாநகராட்சிவாஸ்துசேலம் திமுக மேயரின் "வாஸ்துtamil nadu newstamil janam tvSalem DMK Mayor's "Vastu": Will changing the room remove the dissatisfaction?
Share
Tweet
SendShare
Previous Post

தூத்துக்குடி, சாத்தான்குளம் சம்பவங்களை மறந்துவிட முடியாது : முதலமைச்சர் ஸ்டாலின்

Next Post

நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை : வாழ்வாதாரம் பாதிப்பு – தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் பேட்டி!

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies