நீலகிரி மாவட்டம் உதகை அருகே பேக்கிரியில் புகுந்த கரடி, கேக் உண்ணும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உதகை புதுமந்து பகுதியில் பிரபு என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார். இங்கு அதிகாலை நேரத்தில் வந்த கரடி ஒன்று பேக்கரியின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளது.
தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பெட்டியினை திறந்த கரடி, உள்ளே இருந்த கேக்கினை உண்டு விட்டு வெளியே சென்றுள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.