தருமபுரி அருகே அரசுப் பள்ளி விழாவில் மாணவர்களுடன் இணைந்து திமுக கட்சி துண்டுடன் கவுன்சிலர் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
தருமபுரி மாவட்டம், சந்தைப்பேட்டைப் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில், பெற்றோர்கள், மேலாண்மை குழுவினர், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நடனப் போட்டியின்போது மாணவர்களுடன் சேர்ந்து தருமபுரி ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் மாதேஸ்வரன் திமுக கட்சிக்கொடியுடன் மேடை ஏறி நடனமாடினார்.
இந்த சம்பவம் தொடர்பாகப் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வட்டார கல்வி அலுவலர்கள் விளக்கம் கேட்டுள்ளனர்.