வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் நாடுகளுக்கு 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு எதிராகச் செயல்படும் வெனிசுலா நாட்டில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டியிருக்கும் என்றும், இந்த வரிவிதிப்பு முறை ஏப்ரல் 2ம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்றும் குறிப்பிட்டார்.
ட்ரம்பின் உத்தரவால் சீனா, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.