கர்நாடகாவில் இருந்து ஓசூர் வழியாகக் கேரளாவுக்குக் கடத்தி செல்ல முயன்ற சுமார் ஏழாயிரம் லிட்டர் எரி சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கர்நாடகாவிலிருந்து ஓசூர் வழியாகக் கேரளாவிற்கு எரிசாராயம் கடத்தப்படுவதாக, சேலம் மத்திய நுண்ணறிவு பிரிவு காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
அதன் பேரில், ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூருவிருந்து தர்பூசணி பழங்களை ஏற்றி வந்த ஈச்சர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், 15 கேன்களில் 7ஆயிரத்து 525 லிட்டர் எரிசாராயம் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த போலீசார், சஜித் மற்றும் பாபுராஜ் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய அனீஷ் என்பவரைத் தேடி வருகின்றனர்.