மகாராஷ்டிராவில் மராத்தி பேச மறுத்த வணிக வளாக ஊழியரை நவநிர்மாண் சேனா தொண்டர்கள் கன்னத்தில் அறைந்தனர்.
மும்பையில் உள்ள பிரபல வணிக வளாகத்திற்குச் சென்ற நவ நிர்மாண் சேனா அமைப்பை சேர்ந்த தொண்டர்கள், ஊழியரிடம் மராத்தியில் பேசியுள்ளனர்.
அப்போது மராத்தி தெரியாது எனக் கூறியதால் கன்னத்தில் அறைந்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.