அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட்டணி அமைக்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விட்டு சென்னை திரும்பிய அவர் செய்தியாளர்களிடம் பேசினார.அப்போது,தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்றார்.
தமிழகத்தில் மக்கள் விரோத திமுக ஆட்சி அகற்றப்படும் என்றும்,திமுக ஆட்சியை அகற்றுவதற்கு அதிமுக அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்றும் தெரிவித்தார்.
தமிழக பிரச்னை தொடர்பாகவே அமித் ஷாவிடம் மனு அளித்துள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.