நாமக்கல் மாவட்டத்தில் சாய ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரால் காவிரி நீர் மாசடைந்து வருகிறது.
நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் ஏராளமான விசைத்தறி மற்றும் சாய ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகள் சாய நீரைச் சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாகக் காவிரி ஆற்றில் வெளியேற்றி வருகின்றன.
இதனால் காவிரி ஆற்று நீர் மாசடைந்து பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது. இதனால் அந்த நீரைப் பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.