மியான்மரில் நிலநடுக்கத்தால் ரயில் தண்டவாளங்கள் உருக்குலைந்து காணப்பட்டன.
அந்நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் அங்குள்ள பியின்மனா நகர் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளங்கள் உருக்குலைந்தன. இதையடுத்து சீரமைப்பு பணியில் அந்நாட்டு ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மியான்மரில் நிலநடுக்கம் காரணமாகச் சாலைகள் இரண்டாகப் பிளந்து காணப்பட்டன. பல மீட்டர் ஆழத்துக்குள் சாலை பிளந்ததால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
நேற்று நிலநடுக்கத்தின்போது மண்டலே மாகாணத்தில் உள்ள மைத்தா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.