யோகா வழியே ஒட்டுமொத்த உலகையும் ஆரோக்கியம் நிறைந்ததாக மாற்ற விரும்புவதாக மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
120-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். கடந்த 8 ஆண்டுகளில் 1,100 கோடி கன மீட்டர் தண்ணீர் சேமிப்பு நடந்துள்ளதாகவும், புதிய நீர் தேக்க கட்டமைப்புகள் இதை சாத்தியமாக்கியதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
அவரது உரையில், யோகா தினத்திற்கு 100-க்கும் குறைவான நாட்களே உள்ளதாகவும், அது தற்போது பிரம்மாண்ட திருவிழாவாக மாறி விட்டதாகவும் கூறினார். “ஒரே பூமி – ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா” என்பது 2025-ம் ஆண்டுக்கான யோகா தின கருப்பொருளாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
யோகாவின் வழியே உலகின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த விரும்புவதாக பிரதமர் மோடி கூறினார். பள்ளிகளுக்கான கோடைக்கால விடுமுறையை பயன்படுத்தி, மாணவர்கள் தங்களுடைய திறனை மெருகேற்றிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.