100 நாள் வேலை வாய்ப்பு திட்ட முறைகேடு சிபிஐ விசாரணைக்கு ஒப்புதல் அளிப்பீர்களா? என முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு அவர் 4 கேள்விகளை எழுப்பிள்ளார். அவை பின்வருமாறு :
1) கடந்த நான்கு ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் மூலம் தமிழகம் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் (MGNREGA Scheme) மூலம் 39,339 கோடி ரூபாய் பெற்றுள்ளது. ஆனால் இந்த திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்தால் இதனை சிபிஐ விசாரிக்க ஒப்புதல் அளிப்பீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த ஊழலின் அளவை மக்கள் புரிந்துகொள்ள ஒரு மாதிரி கிராமத்தை நாங்கள் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
2) மூன்று மடங்கு அல்லது ஐந்து மடங்கு அதிகமான கிராமப்புற மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள் MGNREGA திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டை விட குறைவான நிதியைப் பெற்றுள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?
3) MGNREGA வேலை நாட்களை 100 லிருந்து 150 ஆக உயர்த்துவதற்கான தேர்தல் வாக்குறுதியை எப்போது நிறைவேற்ற திட்டமிட்டுள்ளீர்கள்?
4) உழைப்பாளி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை உங்கள் கட்சி கொள்ளையடித்துள்ளது எனறும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.