நாமக்கல்லில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் தொடங்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு மத்திய அமைச்சர் எல். முருகன் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதி மாணவர்களுக்காக நீட் இலவச பயிற்சி மையம், நாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள ராம விலாஸ் கார்டன் பகுதியில் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில், நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் கே.பி.சரவணன், குத்துவிளக்கு ஏற்றி பயிற்சி மையத்தைத் தொடங்கி வைத்தார்.
அப்போது மத்திய அமைச்சர் எல்.முருகன், டெல்லியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து தொலைபேசி மூலம், நீட் பயிற்சி மையத் திறப்பு விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.