பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகக் குண்டு துளைக்காத கண்ணாடிக்குப் பின்புறம் நின்று நடிகர் சல்மான்கான் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரம்ஜானையொட்டி, மும்பை பாந்த்ராவில் உள்ள நடிகர் சல்மான்கான் வீட்டிற்கு வெளியே நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். கேலக்ஸி அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வெளியே காத்திருந்த ரசிகர்களுக்கு சல்மான்கான் ராம்ஜான் வாழ்த்து தெரிவித்தார்.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அவர் குண்டு துளைக்காத கண்ணாடிக்குப் பின்புறம் இருந்து வாழ்த்துக் கூறினார். கடந்த ஆண்டு அவர் வீட்டின் பால்கனி மீது நின்றிருந்தபோது துப்பாக்கியால் சுடப்பட்டது குறிப்பிடத்தக்கது.