இலங்கை தலைநகர் கொழும்பில் இந்தியா இலங்கை இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தாய்லாந்தில் நடைபெற்ற பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்குச் சென்றுள்ளார்.
இலங்கை சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குச் சிவப்பு கம்பள வரவேற்புடன், ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கொழும்பில் நடைபெற்ற இருநாட்டுத் தலைவர்கள் இடையேயான பேச்சுவார்த்தையின்போது, முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அதில் எரிசக்தி, பாதுகாப்பு ஒத்துழைப்பு, எண்மமயமாக்கல், சுகாதார பராமரிப்பு, இலங்கைக்கான இந்தியாவின் மறுசீரமைக்கப்பட்ட கடனுதவி உள்ளிட்டவை அடங்கும்.
இதனைத் தொடர்ந்து சுமார் 100 மில்லியன் டாலர்கள் இந்திய நிதி உதவியுடன் சம்போரில் அமைக்கப்பட்டுள்ள சூரியசக்தி மின் நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
இதேபோல இந்திய நிதி பங்களிப்பில் டம்புலாவில் காய்கறிகளின் தட்பவெப்பநிலையைப் பராமரிக்க அமைக்கப்பட்ட கிடங்கையும், 5000 மதத் தலங்களுக்கான சூரியசக்தி உற்பத்தியமைப்பையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.