உத்தரப்பிரதேச மாநிலம் காசி விஸ்வநாதர் கோயிலில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், சுவாமி தரிசனம் செய்தார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வாரணாசி சென்றுள்ளார். தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்வதற்காக காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்ற அவருக்குக் கோயில் நிர்வாகத்தினர் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.
பின்னர் கோயிலில் உள்ள லிங்கத்திற்கு அவர் சிறப்புப் பூஜை செய்து மனமுருகி வழிபாடு நடத்தினார்.