புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் சந்தித்தார்.
இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே உறவுகளை வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மோடி மீண்டும் வலியுறுத்தினார். இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான விரிவான உத்திபூர்வ கூட்டாண்மையை முன்னெடுத்துச் செல்வதில் துபாய் முக்கியப் பங்கு வகித்துள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த சந்திப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
“துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூமை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே விரிவான உத்திசார் கூட்டாண்மையை முன்னெடுத்துச் செல்வதில் துபாய் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்தச் சிறப்புப் பயணம் நமது ஆழமான வேரூன்றிய நட்புறவை மீண்டும் உறுதிப்படுத்துவதுடன், எதிர்காலத்தில் இன்னும் வலுவான ஒத்துழைப்புக்கு வழி வகுக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.