தஞ்சாவூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சகோதரரை விடுவிக்கக்கோரி விஷம் குடித்து தங்கை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடுகாவேரி பகுதியைச் சேர்ந்த தினேஷ் மீது பல வழக்குகள் நிலுவையிலிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை விசாரணைக்காகக் காவல் ஆய்வாளர் சர்மிளா அழைத்துச் சென்றுள்ளார்.
இதையடுத்து காவல் நிலையம் வந்த தினேஷின் சகோதரிகள் 3 பேர், சகோதரரை விடுவிக்கக்கோரிக் கேட்டுள்ளனர்.
ஆனால் அதற்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவித்ததுடன், தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த கீர்த்திகா, மேனகா ஆகிய இரு சகோதரிகள், காவல் நிலையம் முன்பே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் கீர்த்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மேனகா சிகிச்சை பெற்று வருகிறார்.