வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எதிராகப் போராட இந்தியாவுக்குச் சீனா அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அமரிக்கா புதிய வரிகளை விதித்துள்ளது. இதற்கு எதிர்வினை ஆற்றாமல் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மவுனம் காத்து வரும் சூழலில், சீனா அமெரிக்கா மீது பதிலுக்கு இறக்குமதி பொருட்களுக்கு 34% வரி விதிப்பதாக அறிவித்தது.
இந்நிலையில், அமெரிக்க வரிவிதிப்பை எதிர்கொள்ள இணைந்து செயல்படுவோம் என்று இந்தியாவுக்குச் சீனா அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவுக்கான சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் யு ஜிங் தனது எக்ஸ் தளப் பக்கத்தின் மூலம் அழைப்பு விடுத்திருக்கிறார்.