டொமினிகன் குடியரசில் இரவுநேர கேளிக்கை விடுதியின் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அந்நாட்டின் தலைநகர் சாண்டோ டொமினிகோவில் இரவுநேர கேளிக்கை விடுதியில் நேற்று இரவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இசை நிகழ்ச்சி அதிகாலை வரை நீடித்துள்ளது. அப்போது, மேற்கூரை சரிந்து விழுந்ததில் 98 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.