அமெரிக்காவில் கனமழையால் கார் மீது ராட்சத மரம் விழுந்ததில் நல்வாய்ப்பாக காரில் பயணித்தவர் உயிர் தப்பினார்.
பென்சில்வேனியா, ஓஹியோ உள்ளிட்ட மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாகப் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பென்சில்வேனியா பகுதியில் சாலையில் சென்ற கார் மீது ராட்சத மரம் விழுந்தது. இதில் நூலிழையில் கார் ஓட்டுநர் உயிர் தப்பிய நிலையில், அதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.