தேனி மாவட்டம், கூடலூரில் கோயில் திருவிழாவையொட்டி விமரிசையாக நடத்தப்பட்ட கிடா முட்டு போட்டியைப் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
கூடலூரில் உள்ள காளியம்மன் கோயில் பங்குனி மாத உற்சவ விழாவையொட்டி அனுமதி பெற்று மாபெரும் கிடா முட்டு போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட ஜோடி ஆட்டுக் கிடாய்கள் பங்கேற்றன.
அப்போது கிடாய்கள் ஒன்றுடன் ஒன்று சீறிப்பாய்ந்து முட்டுவதைப் பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர். கிடா முட்டு போட்டியையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.