சென்னை அண்ணா நகர் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞர் கார் கதவில் மோதி கீழே விழுந்தபோது மற்றொரு கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மோகன் வில்லா பார்க் வழியாகச் சைக்கிளில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் நின்றிருந்த காரின் கதவை ஓட்டுநர் திறந்ததையடுத்து, கதவில் மோதி இளைஞர் கீழே விழுந்தார்.
இதையடுத்து எதிர்பாராத விதமாக இளைஞர் மீது பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.