போக்சோ வழக்கில் தலைமறைவாக உள்ள கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கோவையைச் சேர்ந்த கிறிஸ்தவ மத போதகரான ஜான் ஜெபராஜ் கடந்த ஆண்டு மே மாதம் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமிகள் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ஜான் ஜெபராஜை தேடி வருகின்றனர்.
மேலும் அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். இந்நிலையில் ஜான் ஜெபராஜ், தன் மீது பொய் புகார் கூறப்பட்டதாகக் கூறி, முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.