தைப்பூச திருநாள் - நயினார், எல்,முருகன், அண்ணாமலை வாழ்த்து!
Sep 18, 2026, 04:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தைப்பூச திருநாள் – நயினார், எல்,முருகன், அண்ணாமலை வாழ்த்து!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 1, 2026, 10:25 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தைப்பூச திருநாளை முன்னிட்டு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள பதிவில், பக்தியும் பொறுமையும் துணையாக,அன்பும் அறமும் வழிகாட்ட, இந்த தைப்பூசத் திருநாளில் தாய் மடியில் தழுவும் பிள்ளையென எங்களை காத்து சோதனைகளில் துணையாய் நின்று, வெற்றியின் வழி காட்டி,உன் அருளால் எங்கள் வாழ்வெங்கும் நம்பிக்கை, ஆனந்தம் நிரம்பச் செய்ய உன்னை மனம் உருகி வேண்டிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

நம் தமிழகத்தை இருள் சூழ்ந்திருக்கும் இந்த நிலையில் விடியா திமுக ஆட்சியை அகற்ற அருள் புரிய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நம் தமிழர்களின் வாழ்நாள் கோரிக்கையான தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த ஆட்சியில் 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அஇஅதிமுகவின் பொதுச் செயலாளர் இபிஎஸ்
அவர்களுக்கு இந்த நேரத்தில் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவிததுள்ளார்.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள பதிவில், ” கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த முதல் குடியாம் தமிழ்க் குடியின் ஆதி கடவுளாய், நாம் அன்போடு போற்றுகின்ற அருள்மிகு முருகப் பெருமானின் உகந்த தினமான ‘தைப்பூசம்’ திருநாள் வாழ்த்துகளை, உலகெங்கும் வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவருக்கும்  தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

நமது தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பாக நடைபெற்ற ‘வேல் யாத்திரை’ நிகழ்வின் போது, இத்திருநாளுக்கான அரசு விடுமுறையை பெற்றுத் தந்தோம் என்பதில் பெருமிதம் அடைகிறோம். மேலும், நம் மக்கள் அனைவருக்கும், அவரவர் நினைத்த நற்காரியங்களும், சகலவிதமான மகிழ்வோடு, அப்பன் முருகப் பெருமானின் அருளும் கிடைத்திட வேண்டுமென்று மனமார வேண்டிக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

ஆன்மீக விழிப்புணர்வு இல்லாமல் சமூக மாற்றம் சாத்தியமில்லை. அநீதியை எதிர்த்து நிற்கும் துணிச்சலும், தர்மத்தை காக்கும் உறுதியும் இந்த நன்னாள் நம் அனைவருக்கும் தரட்டும். அனைவரின் வாழ்விலும் அன்பும் மகிழ்ச்சியும் நிறையட்டும் என, முருகப் பெருமானிடம் வேண்டிக் கொள்வதாக கூறியுள்ளார்.

Tags: annamalai greetingsl murugan greetingsthai poosam festivalNAINAR GREETINGS
Share
Tweet
SendShare
Previous Post

ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் தலைகுனிந்து நிற்கிறது – இபிஎஸ் விமர்சனம்!

Next Post

பழனியில் தைப்பூச விழா கோலாகலம் – திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Related News

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவைக்கு பாராட்டு – சென்னையில் ஆசீர்வாத தீபம் ஏற்றும் விழா!

பாரத பிரதமர் மோடியின் 76-வது பிறந்த நாள் : நாடு முழுவதும் ஆசீர்வாத தீபம் ஏற்றம்!

உலக அரங்கில் பிரதமர் மோடி பெரும் செல்வாக்கு பெற்றுள்ளார் – ரஷ்ய அதிபர் புதின் புகழாரம்!

பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் – தலைவர்கள் வாழ்த்து!

ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கு – தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் மோடி பிறந்தநாள் – பாஜக சார்பில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

Load More

அண்மைச் செய்திகள்

உலகிற்கு இந்தியா வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்கு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Tier 2, Tier 3 நகரங்களில் இந்திய ஹாஸ்பிட்டாலிட்டி துறை வளர்ச்சியின் அடுத்த அலை : Bharathi Meraki ஆற்றி வரும் பணிகள் – சிறப்பு தொகுப்பு!

பொறியாளர் தின விழா – தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் இளம் பொறியாளர்களுக்கு விருது!

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies