2 நாள் பயணமாக சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நேற்றிரவு 11 மணியளவில் தனி விமானம் மூலம் உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். அப்போது மத்திய அமைச்சர் எல் முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், சுதாகர் ரெட்டி, ஹெச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், வினோஜ் பி செல்வம், கரு நாகராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதையடுத்து, கார் மூலம் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலுக்கு சென்றடைந்தார். அதே நட்சத்திர விடுதியில் பாஜக நிர்வாகிகளை இன்று சந்தித்து பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.