திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் வாய்க்காலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
பழனிக்கு தேவையான குடிநீர் மற்றும் விவசாய பணிகளுக்காக பயன்படுத்தப்படும் வாய்க்கால் அருகே திருப்பூரை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் தனது காரை நிறுத்த முயன்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென வாய்க்காலுக்குள் புகுந்தது.
இதில் அதிர்ஷ்டவசமாக சதீஷ்குமார் மற்றும் அவரின் நண்பர்கள் உயிர்பிழைத்தனர். பின்னர் அப்பகுதியில் இருந்தவர்களின் உதவியோடு கார் மீட்கப்பட்டது.