திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேரோட்ட விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் இக்கோயிலில் கடந்த 3ம் தேதி பங்குனி கொடியேற்றம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு ஒவ்வொரு நாட்களும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக பங்குனி தேரோட்டம் சிறப்பாக நடத்தப்பட்டது. முன்னதாக சுவாமி சிறப்பு அலங்காரத்தில் மேளதாளம் முழங்க வீதி உலா வந்தார்.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரை பக்தர்கள் ரங்கா ரங்கா என்ற கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.