திருச்சி மாவட்டம் முசிறி அருகே தந்தை இறந்த துக்கத்திலும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய மாணவியின் செயல் கண்கலங்க வைத்தது.
கோணப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முரளி என்பவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் 10 ஆம் வகுப்பு படித்து வரும் அவரது மகள் நிரஞ்சனா, தந்தை இறந்த துக்கத்திலும் தேர்வு எழுதச் சென்றார். மாணவியின் இந்த செயல் அப்பகுதியினரைக் கண்கலங்கச் செய்தது.