நெல்லை மாவட்டம், பாபநாசத்தில் திறக்கப்படாத வாகன காப்பகத்தை நகராட்சி நிர்வாகம் ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் மனு அளித்துள்ளனர்.
பாபநாசம் கோயில் அமைந்துள்ள 12-வது வார்டு பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, 1 கோடியே 90 லட்சம் மதிப்பில் வாகன காப்பகம் அமைக்கப்பட்டது.
பணிகள் நிறைவடைந்த நிலையில் இதுவரை வாகன காப்பகம் திறக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த வாகன காப்பகத்தை ஏலம் விட நகராட்சி நிர்வாகம் எடுத்த முடிவை எதிர்த்து, திமுக நகரமன்ற உறுப்பினர்கள் நகராட்சி மேலாளரிடம் மனு அளித்தனர்.